Thursday, May 21, 2015

படிப்பை பாதிலேயே நிறுத்தி விட்ட மாணவர்களை படிக்க வைப்பேன் -அரசு பள்ளியில் முதலிடம் பிடித்த மாணவன் பேட்டி!

Unknown  /  at  9:43 AM  /  No comments

அரசு பள்ளியில் படித்து மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளேன் என்று நினைக்கும் போது உண்மையாகவே எனக்கு பெருமையாக இருக்கிறது என்கிறார் அரியலூர் மாவட்டம் பரணம் அரசு உயர் நிலை பள்ளி மாணவர் பாரதி ராஜா கூறினார்.

அரசு பள்ளியில் படித்து பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதல் இடத்தை பிடித்து அரசு பள்ளிகளுக்கு பெருமை தேடி தந்துள்ளார் இந்த மாணவன் பாரதிராஜா. அரியலூர் மாவட்டம், பரணத்தில் உள்ள உயர்நிலைபள்ளியில் படித்த சாதனை மாணவன் பாரதிராஜா சொல்கிறார்.

"அரசு பள்ளியில் படித்து மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளேன் என்று நினைக்கும் போது உண்மையாகவே எனக்கு பெருமையாக இருக்கிறது. கிராமப்புறம் என்பதால் எங்களது ஊரில் உள்ள பள்ளிகளில் சரியான அடிப்படை வசதிகளே கிடையாது. அது மட்டுமில்லாமல் எங்கள் கிராமத்தில் இரவு நேரத்தில் படிக்கும் போது பாதி நாட்கள் கரண்ட் கட்டாகிவிடும் விளக்கை வைத்து. எங்களது பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் கொடுத்த ஊக்கத்தினாலும் தமிழில் 99 மதிப்பெண்ணும், மற்ற அனைத்து பாடங்களிலும் 100 மதிப்பெண்கள் என 499 மதிப்பெண்கள் பெற முடிந்தது.

"எங்க ஊரே என்னை படிக்க வெச்சதுன்னு சொல்லிக்கிறேன்னே.

எங்க ஊர்ல அரசு உயர்நிலைப்பள்ளிதான் இருக்கு. இதுக்குமேல எங்கபோய் படிப்பேன்னு தெரியல. அம்மாவை நேர்ல பார்த்து எங்க அரசு பள்ளிக்கு கொஞ்சம் உதவியும், எங்க ஸ்கூலை மேல்நிலைப்பள்ளியா மாத்தனும்ன்னு கோரிக்கை வைக்கனும்

என்னோட லட்சியமே ஐ.ஏ.எஸ் படிப்பதுதான். படித்து எங்கள் கிராமப்புறத்தை போன்று எத்தனையோ கிராமங்களில் ஏழை மாணவர்கள் படிக்க முடியாமல் படிப்பை பாதிலேயே நிறுத்தி விடுகிறார்கள். அதனை முற்றிலும் ஒழிப்பேன் என்றார் பாரதி...

பாரதி ஓர்  புது கவிதை..

Share
Posted in: , Posted on: Thursday, May 21, 2015

0 comments:

Copyright © 2013 Thiruvalandurai Village / Perambalur District .
.