Sunday, December 22, 2013

கரைவெட்டி பறவைகள் சரணாலயம் மேம்படுத்தப்படும்- கலெக்டர் அறிவிப்பு

Unknown  /  at  5:39 AM  /  No comments

கரைவெட்டி பறவைகள் சரணாலயத்தை மேம்படுத்தப்படும் என்பது அந்த பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கை..

இந்நிலையில் கரை வெட்டி பறவைகள் சரணாலயத்தினை மாவட்ட கலெக்டர் எ.சரவணவேல்ராஜ் ஆய்வு செய்த பிறகு கூறியதாவது:–


தமிழக முதலமைச்சர் தலைமையில் 13.12.2013 அன்று நடைபெற்ற மாவட்ட கலெக்டர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் நமது மாவட்டத்திற்கு அறிவித்த புதியத் திட்டங்களில் கரைவெட்டி பறவைகள் சரணாலயம் மேம்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார். கரைவெட்டி பறவைகள் சரணாலயம் 454 ஹெக்டர் நிலப்பரப்புடன் அமைந்துள்ள மிகப்பெரிய ஏரியாகும். இந்த ஏரிக்கு புள்ளம்பாடி மற்றும் காட்டாறு வாய்கால் மூலம் வரப்படும் நீரின் வரப்பட்டு ஏரியின் கொள்ளவு முழுமை அடைகிறது. இந்த ஏரியின் சராசரி நீரின் ஆளம் 3மீட்டர், வருடத்தில் செப்டம்பர் மாதம் முதல் மே மாதம் வரை இந்த ஏரியில் நீரின் அளவு அதிகமாக உள்ளதால் பறவைகள் அதிகம் வருகின்றன.

இந்த ஏரியின் மொத்த நிலப்பரப்பில் நாகப்பட்டிணம் வன உயிரின காப்பகத்தின் 280 ஹெக்டேர் பரப்பளவில் உள்ள இந்த ஏரியில் 91 வகையான பறவைகள் மத்திய ஆசியா, திபெத், லடாக், வடக்கு ரஷ்யா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளிலிருந்து சின்ன வெள்ளை கொக்கு, உன்னி கொக்கு, மடையன் வக்கா, பாம்பு தாரா, நீர் காகம், ராமச்செருவி, முக்குளிப்பான்சிறவி, நாமக்கோழி, ஆள்காட்டி, நத்தை கொக்கு நாரை, கொசு சுள்ளான், கூலி கோடா, வெள்ளை அரிவாள் மூக்கான், கரண்டி மூக்காண் போன்ற பறவைகள் அதிகளவில் இடம் பெயர்ந்து இங்கு வந்து தங்கி செல்கின்றன.

இந்த ஏரியின் குளிர்ச்சியான சீதோசன நிலை, தேவையான உணவு, தங்குவதற்கும் முட்டையிடுவதற்கும் தேவையான மரங்கள் அடந்த சூழ்நிலை இருப்பதால் பறவைகள் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் இந்த ஏரிக்கு வந்து தங்கி முட்டையிட்டு குஞ்சு பெறித்து விட்டு மீண்டும் ஏப்ரல், மே மாதங்களில் தங்கள் நாடுகளுக்கு பயணம் செய்கின்றன.

இந்த ஏரிகரையில் உள்ள தொலைநோக்கி பார்வை கூடம் மூலம் பலவிதமான பறவைகளை கண்டு ரசிக்கலாம். இந்த பறவைகள் சரணாலயத்தில் வரக்கூடிய சுற்றுலா பயணிகள் பறவைகளை அருகில் காண்பதற்கு ஏதுவாக வனத்துறையின் மூலம் ஏரியின் கரைகளில் மரக்கன்றுகள் நடுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், இங்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் வசதிக்காக குடிநீர் வசதி, உணவு உண்ணும் கூடம், பொருட்கள் வைக்கும் பாதுகாப்பு அறை மற்றும் கழிப்பறை ஆகியவற்றுடன் கூடிய சுற்றுலா பயணிகள் ஓய்வு கூடம் விரைவில் கட்டுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஆண்டு முழு வதும் ஏரியில் நீர் தேக்கி வைப்பதற்கான நடவடிக்கைகளும், சுற்றுலா பயணிகளுக்கு தேவையான போக்குவரத்து வசதிகளையும் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுமென மாவட்ட கலெக்டர் எ.சரவணவேல்ராஜ் கூறினார்.

இவ்வாய்வில் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் துரை.மணிவேல், திருமானூர் ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் சீனிவாசன், வருவாய் கோட்டாட்சியர்கணபதி, வட்டாட்சியர் முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

Share
Posted in: Posted on: Sunday, December 22, 2013

0 comments:

Copyright © 2013 Thiruvalandurai Village / Perambalur District .
.