Wednesday, December 25, 2013

ரட்சிக்கப்படாத ராமையாவின் குடிசை..... ஊதிய உயர்வுக்கேட்ட 44 பேரை உயிரொடு எரித்த தினம் இன்று

Unknown  /  at  3:39 AM  /  No comments

 உலகமே  ஏசு கிருஸ்து  பிறந்த நாளானா  அன்று  உலகமே  கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்களில் மூழ்கி இருந்த நேரம் .. கூலி உயர்வு கேட்டு  போராடிய 44  உழைக்கும்  ஏழை கூலி விவசாய தொழிலாளர்கள்  மீது அந்த  யேசுபிரான்  கூட,  அவர்கள்  தலித்துகள் என்பதால்  இரக்கப்படவில்லை என்பதுதான் வேதனை.

1968 டிசம்பர் 25   தஞ்சை மாவட்ட கீழ்வெண்மணியின் தாழ்த்தப்பட்ட விவசாயத் தொழிலாளர்களுக்கு  விடியாத இரவாகவும் அமைந்தது என்பது உண்மைதான்.   தாழ்த்தப்பட்ட விவசாயத் தொழிலாளர்கள் சங்கமாகத் திரண்டு தங்களுக்குக் கிடைக்கும் வழக்கமான கூலியில் அரை லிட்டர் நெல் உயர்த்தித் தர வேண்டுமென்று கேட்ட குற்றத்திற்காக  44 பேர் உயிரோடு தீ வைத்துக் கொளுத்தப்பட்ட  கொடூர தினம்  இன்று.

போராட்டங்கள் இல்லாமல் எந்த விடுதலையில்லை என்பது உண்மைதான்,  விடுதலை போரில் ஆதிக்கத்திற்கு எதிராக களம்கண்ட  வேலுநாச்சியரின்  பிறந்தநாள் இன்று.. ஆனால் இவர்களின் நீதிக்காக எந்த  வீரனும் வாய்திறக்கவே இல்லை என்பதுதான் உண்மை. 
வெண்பணியில் நடந்தது  என்ன..

  விவசாயத் தொழிலாளர்கள் சங்கமாகத் திரண்டு  தங்களுக்குக் கிடைக்கும் கூலியில் அரை லிட்டர் நெல் உயர்த்தித் தர வேண்டுமென்று கோரிக்கை வைத்தனர். அவர்களின் தொடர் கோரிக்கையின் விளைவாக 1967 ஆம் ஆண்டில் நடைபெற்ற முத்தரப்பு மாநாட்டில் கூலி உயர்வு ஒத்துக் கொள்ளப்பட்டது. ஆனால் பல மிராசுதாரர்கள் ஒத்துக் கொண்ட கூலியைக் கொடுக்க மறுத்தனர். உள்ளுர் விவசாயத் தொழிலாளர்களைப் பணிய வைக்க வெளியூர் ஆட்களை அமர்த்தினர். 

இத்துடன் நில்லாமல் விவசாயத் தொழிலாளர் சங்கங்களையே முடக்கிவிட வேண்டுமென்று போட்டியாக நாகை வட்டார நிலப் பிரபுக்கள் தலைமையில் நெல் உற்பத்தியாளர் சங்கத்தை ஏற்படுத்தினர். அந்த சங்கத்திலிருந்து திட்டமிட்டு விவசாயத் தொழிலாளர்களைத் தாக்குவது, முக்கிய ஊழியர்களைக் கொலை செய்வது என்ற தீர்க்கமான முடிவுக்கு வந்தார். அதாவது போராட துணை நிற்பவர்கள், போராட்டம் நடத்துபவர்களை ஒடுக்குவது, வழியில்லை எனில் கொலை செய்வது என தீர்மானம் போட்டனர்.  இந்தசதிகள் குறித்து   அப்போதே  தஞ்சை மாவட்ட விவசாயத் தொழிலாளர் சங்கங்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்கள் அதிகாரிகளுக்கும் அமைச்சர்களுக்கும்  தொடர்ந்து  தெரிவித்து வந்தார்கள். ஆனால்  எந்த நடவடிக்கையும் இல்லை.

குழந்தைகளை தீயில் தூக்கிப்போட்ட கொடுமை

இந்நிலையில்தான் அந்த உச்சக் கட்டக் கொடுமை அரங்கேறியது 5.12.68 மாலை 5 மணியளவில் வெண்மணிக் கிராமத்தைச் சேர்ந்த முத்துச்சாமி, கணபதி என்ற இரண்டு தாழ்த்தப்பட்ட விவசாயத்தொழிலாளர்களை மிராசுதாரர் சவரிராஜ் நாயுடு, தன்னோட வீட்டில் கட்டி வைத்து அடித்து உதைக்கிறார்கள்.  இந்த சம்பவம் ஊர் முழுக்க தீயாய் பரவுகிறது. சம்பவ இடத்திற்கு திரண்டு வந்த விவசாய தொழிலாளர்கள்,பாதிக்கப்பட்டவர்களை  மீட்டுச்சென்றனர். 

இந்த தகவல் பெரு மிராசுதாரர் கோபால கிருஷ்ண நாயுடு போன்றோருக்கு  தகவல் போக,  பெருங்கோபத்தோடு  கோபால கிருஷ்ண நாயுடு ஆள் திரட்டி வெண்மணி கிராமத்துக்கு அடியாட்களுடன்  நுழைகிறார்..

இவர்கள் நடத்திய தாக்குதல் சம்பவத்தில் பக்கிரிசாமி சம்பவ இடத்தில் இறந்துவிடுகிறார்.  ஆனாலும் துப்பாக்கிகள் சகிதம் அடியாட்களுடன் திரண்டு வந்த மிராசுதாரர்கள்  தாக்கியிருக்கிறார்கள். இதன் விளைவாக  துப்பாக்கி சூட்டிற்கு பயந்து  தாக்கு பிடிக்க முடியாமல் தொழிலாளர்கள் தலைதெறிக்க ஓடுகின்றனர். தப்பித்து ஓட முடியாத நிலையிலிருந்த  பெண்கள், குழந்தைகள், வயோதிகர்கள் உயிர் பிழைக்க  அந்தசாதிவெறி கூட்டத்திடம் கெஞ்சி கதறினர்.

அப்போது மனம் இறங்ககாத அந்த வெறியர்கள். மீண்டும் அவர்கள் மீது தாக்குதல் நடத்த, பயத்தில் உறைந்த அவர்கள்  ஒரு குடிசைக்குள் பதுங்கினர்.  இதைகண்ட அந்த கலவரக்காரர்கள் குடிசை வீட்டின் கதவை பூட்டிய கையோடு வீட்டுக்கு  தீ வைத்தனர்.

 தீயின் கோர தாண்டவத்தால் அவர்கள் கருகிய நிலையில், கையில் வைத்திருந்த மூன்று குழந்தைகளை, தாங்கள் செத்தாலும் பிள்ளைகள் உயிர்வாழட்டும் என வெளியில் வீசினார்கள் ஆனால் அந்த மூன்று சிறு குழந்தைகளையும் தூக்கி நெருப்பில் எறிந்த கொடுமையைச்  செய்தது அவர்களின் சாதிவெறி.  இதில் 44பேர் தீயில் கருகினர்.

இது நடந்தது இரவு எட்டு மணி. இதுதொடர்பான  கீவளுர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிந்தும் விசாரணைக்கு  வந்தபோது இரவு 12 மணி.  தீயணைப்புப் படை வந்தது  இரவு இரண்டு மணி .  யாருக்காக இந்த காலதாமதம்.. மறுநாள் காலை 10 மணிக்கு குடிசைக்குள் நுழைந்து கருகிய 44 சடலங்களை எடுத்தனர்.    அதிகார வர்க்கத்தினருக்கு  அதிகாரிகளும் அடிமையானதன் விளைவுதான் இந்த தாமதம் என்கிறார்கள் பாதிக்கப்பட்டவர்கள்.

கொலைகாரர்கள்  இந்த கொலைகளை  விவசாயத் தொழிலாளர்கள் மீதே பழி போட சூழ்ச்சி செய்தனர். இந்த கொடுமைக்கு சில பத்திரிக்கைகளும் உடந்தையாயின.  “விவசாயத் தொழிலாளர்களே தங்கள் பெண்டு பிள்ளைகளை இச் சிறு அறையில் தள்ளி வெளியில் தாழ்ப்பாளிட்டுக் கொன்றனர் என்று கற்பனைக்கும் எட்டாத பொய் பரப்பப்பட்டது. 

அப்போதிருந்த போலீஸ் ஐஜியோ ஒரு படிமேலே போய்,  கீவளுர் வட்டாரத்தில் வைசன்ஸ் பெற்ற துப்பாக்கிகள் 42 இருப்பதாகவும், 28 ஆம் தேதி முடிய 5 துப்பாக்கிகளே போலீசுக்கு வந்துள்ளன என்ற கூறினார். இறந்தவர்களில் 19 பேர் பெண்கள், அதில் 12 பேர் திருமணமானவர்கள். 7 பேர் மணமாகாத இளம் பெண்கள், ஆண்கள் மற்றும் பச்சிளங்குழந்தைகள். 22 வயது முதிர்ந்த ஆண்கள் 3. துப்பாக்கிச் சூட்டில் காயமுற்றோர் 11 பேர்.

மிராசுதாரர்கள் வைத்த தீயில் மாதாம்பாள் என்ற பெண்மணி, தான் சாகும் பொழுதும் தான் வளர்த்த பிள்ளையை தீ தின்றுவிடக் கூடாது என்று அவ்வாறு அணைத்தபடியே தாயும் சேயும் இணைந்தே கரிக்கட்டியாய் கிடந்தபோது கூட  அவர்களின் சாதி வெறி அடங்கவில்லை..

வேடிக்கை பார்த்த தமிழகம்.

வெண்மணியில் கொடூரத்திற்கெதிராக  தமிழகம் வெகுண்டெழவில்லை. பண்பாடு, நாகரீகம், மரபு பற்றியெல்லாம் விண்ணுக்கும் மண்ணுக்கும் எட்டுமளவு வாய் கிழியப் பேசப்படும் தமிழகத்தில், வெண்மணியில் வெந்து சாம்பலாக்கப்பட்ட நாற்பத்தி நான்கு தாழ்த்தப்பட்ட விவசாயத் தொழிலாளர்களின் மீது இரக்கம் கூடக் காட்டவில்லையே ஏன்?

இது இப்படியிருக்க  நீதி தேவனும் ஓரஞ் சாய்ந்து விட்டான். ஆம். வெண்மணிச் சம்பவத்திற்கு காரணம் என்று சொல்லப்பட்ட நிலப்பிரபு - கோபால கிருஷ்ண நாயுடு வகையறாக்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் விடுதலை செய்யப்பட்டனர். நீதிமன்றத் தீர்ப்பு

“பதிவான சாட்சியங்களைப் பரிசீலித்ததில் குற்றவாளிகள் மீது குற்றத்தை நிரூபிக்க வாதிகள் தரப்பில் (பிராசிகேஷன் தரப்பில்) தவறி விட்டதாகவும்,  இதன் காரணமாகப் பிரதிவாதிகள் அனைவரையும் விடுதலை செய்கிறோம். என்றது... நீ(சா)தி வெறி..

இத்தனை உயிர்களை  எரித்துக்கொன்ற கொலைகாரர்களையும், அவர்களுக்கு துணைபோன அதிகாரிகளையும் சரி,  அடிமைச் சின்னமான சிலுவையில்  தொங்கிய  யேசு கிருஸ்துவும், இறைத்தூதுவரான நபிகளும் துரோகமே உருவான இந்து தெய்வங்களும்,    ஒரு ..........புடுங்கவில்லை....

(தீயில் கருகிய வெண்மணித் தியாகிகள் பட்டியல்) உயிருடன் எரிக்கப்பட்ட 44 பேர்களில் (20 பெண்கள் 19 குழந்தைகள்) என்பது நெஞ்சை பிளக்கிறது. 
1. சுந்தரம் (45)
2. சரோஜா(12)
3. மாதாம்பாள்(25)
4. தங்கையன் (5)
5. பாப்பா (35)
6. சந்திரா (12)
7. ஆசைத் தம்பி (10)
8. வாசுகி (3)
9. சின்னப்பிள்ளை (28)
10. கருணாநிதி(12)
11. வாசுகி (5)
12. குஞ்சம்பாள் (35)
13. பூமயில் (16)
14. கருப்பாயி (35)
15. ராஞ்சியம்மாள் (16)
16. தாமோதரன் (1)
17. ஜெயம் (10)
18. கனகம்மாள் (25)
19. ராஜேந்திரன் (7)
20. சுப்பன் (70)
21. குப்பம்மாள் (35)
22. பாக்கியம் (35)
23. ஜோதி (10)
24. ரத்தினம் (35)
25. குருசாமி (15)
26. நடராசன் (5)
27. வீரம்மாள் (25)
28. பட்டு (46)
29. சண்முகம் (13)
30. முருகன் (40)
31. ஆச்சியம்மாள் (30)
32. நடராஜன் (10)
33. ஜெயம் (6)
34. செல்வி (3)
35. கருப்பாயி (50)
36. சேது (26)
37. நடராசன் (6)
38. அஞ்சலை (45)
39. ஆண்டாள் (20)
40. சீனிவாசன் (40)
41. காவிரி (50)
42. வேதவள்ளி (10)
43. குணசேகரன் (1)
44. ராணி (4)


நன்றி: பஞ்சமன்

Share
Posted in: , , Posted on: Wednesday, December 25, 2013

0 comments:

Copyright © 2013 Thiruvalandurai Village / Perambalur District .
.