Tuesday, February 17, 2015

பெரம்பலூர் அதிமுக மாவட்ட செயலாளர் பதவியை இழந்த பின்னணி

Unknown  /  at  7:22 PM  /  No comments

பெரம்பலூர் அதிமுக மாவட்ட செயலாளர் பதவியை இழந்த பின்னணி
தான் சீரமைத்து மேம்படுத்தி பூஜை மேல் பூஜை போட்டுக் கொண்டிருந்த மாவிலங்கை பகவதியம்மன் கோயிலையும் பறிகொடுத்து மா.செ. பதவியையும் பறிகொடுத்துவிட்டார் பெரம்பலூர் ரவிச்சந்திரன்.

அக்டோபர் 11-14 இதழிலேயே ""பெரம்பலூர் அ.தி.மு.க. மா.செ. ரவிச்சந்திரன் உருவாக்கிய கோயிலை அறநிலையத்துறை தனது கட்டுப் பாட்டிற்கு கொண்டுசெல்ல முயற்சிக்கிறது'' என்பதை எழுதியிருந்தோம். ஐந்துமாத இழுபறிக்குப் பிறகு அந்தக் கோயில் இப்போது அறநிலையத் துறைக்குச் சென்றுவிட்டது.

ஏற்கனவே ஒருமுறை ரவிச்சந்திரனிடமிருந்து மா.செ. பதவியை அ.தி.மு.க. தலைமை பறித்துக்கொண்டது. பதவியைப் பறிகொடுத்து விட்டு, பரிதாபமாக நின்ற ரவிச்சந்திரனிடம் ""பெரம்பலூர்ல இருந்து வேப்பந் தட்டை வழியாக 25 கி.மீ. தொலைவில் இருக்கிற மாவிலங்கையில் பகவதியம்மன்னு ஒரு ஊர்க்காவல் தெய் வம் இருக்கு. அதைப்போய் பயபக்தி யோடு கும்பிடு என்று கனவில் கடவுள் சொன்னதால் கோயிலைக் கட்டினார்'' என்கிறார்கள் உறவினர்கள்.

மீண்டும் ரவிச்சந்திரனை மா.செ. யாக்கினார் ஜெ. அ.தி.மு.க.வும் மீண்டும் ஆட்சிக்கு வந்தது. விளைவு...? அந்த அம்மன் மீது தீராத பக்திமானாக மாறிப்போனார் ரவிச்சந்திரன். பாழடைந்து கிடந்த பகவதியம்மன் கோயிலை மேலும் புதுப்பித்துக் கட்டி னார். பக்கத்தில் பக்தர்கள் ஓய்வெ டுக்க ஒரு மண்டபத்தைக் கட்டினார். பூஜை செய்வோருக்காக ஒரு சமை யல்கூடம் கட்டினார். கல்யாணங் களுக்காக ஒரு சிறிய மண்டபத்தைக் கட்டினார். அதோடு, நின்றுவிடா மல் பகவதியம்மனை படவேட்டை அம்மன் என்று பெயர் மாற்றமும் செய்தார்.

""கேரளாவில் இருந்து யானைகளையும் அர்ச்சகர் களையும் மந்திரவாதிகளையும் அழைத்துவந்து அடிக்கடி கெஜபூஜைகள் நடத்தினார். பணத்தை வாரியிறைத்து குடமுழுக்கு நடத்தினார். அரை ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தின் நடுவில் கோயில் இருப்பதால் இந்து அறநிலையத்துறை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று ரவிச்சந்திரனின் எதிர்கோஷ்டியான முன்னாள் துணை சபாநாயகர் அருணாசலம் கோஷ்டியினர் ஜெயலலிதாவுக்கும் அறநிலையத்துறைக்கும் புகாருக்கு மேல் புகாராக அனுப்பிக்கொண்டிருந்தார்கள்'' என்கிறார்கள் மாவிலங்கை மக்கள்.

இரண்டு கோஷ்டிகளையும் தலைமைக் கழகத்திற்கு அழைத்து பஞ்சாயத்து செய்து, உட்கட்சி தேர்தலில் இணைந்து பணியாற்றுங்கள் என்று முதலமைச்சர் ஓ.பி.எஸ். சொன்னதை டிசம்பர் 31 இதழில், நாம் பதிவு செய்திருந்தோம்.

இந்த நிலையில்தான் மாவிலங்கைக்கு அறநிலையத்துறை அதிகாரிகள் வந்து ஆய்வு செய்தார்கள்.

கோபமான மா.செ. ரவிச்சந்திரன், பெரம்பலூர் சிவில் கோர்ட்டில் வழக் கிற்கான ஆதாரங்களைத் திரட்டியதோடு "இந்தக் கோயில் மாவிலங்கை கிராம மக்களுக்குச் சொந்தமான கோயில்' என்று அறநிலையத் துறைக்கும் ஜெ.வுக்கும் அனுப்பினார்.

இதையடுத்து, ஆய்வாளர் மலையரசன் பாண்டி என்பவரை, மாவிலங்கைக்கு அனுப்பினார் அறநிலையத்துறை ஆணையர் தனபால். ""விசாரணைக்கு வந்த மலையரசன்பாண்டியை திட்டிப் பிடித்துத் தள்ளிவிட்டார்கள் கிராம மக்கள்.

ஆய்வாளர் கைகளத்தூர் காவல் நிலையத்தில் மா.செ. மீது புகார் கொடுத்துவிட்டார். இது மட்டுமின்றி மாவிலங்கை மக்கள் 300 பேர் திரண்டு "கோயிலைத் தரமாட்டோம்' என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.

இவையனைத்தும் உளவுத்துறை மற்றும் அறநிலையத்துறை வாயிலாக ஜெ.வுக்குச் சென்றன. கூடவே ""திருவரங்கம் இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு கூடச் செல்லாமல், பகவதியம்மன் கோயிலில் பூஜை செய்கிறார், மா.செ. ரவிச்சந்திரன்'' என புகாரும் போனது.

இத்தனைக்கும் பிறகு 7-2-15 அன்று மாலையில் பெரம்பலூர் மா.செ. பதவியிலிருந்து ரவிச்சந்திரனை நீக்கினார் ஜெ. மறுநாள் ""இந்தக் கோயில் அறநிலையத்துறைக்குச் சொந்தமாக்கப் பட்டுள்ளது'' என்று கோயிலில் போர்டு வைத்துவிட்டார்கள் அதிகாரிகள்.

வருகின்ற 22-2-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று, தனது மகன் வினிஷ் திருமணத்தை இந்தக் கோயிலில்தான் நடத்தவிருந்தார் ரவிச் சந்திரன். திருமணப் பத்திரிகையை உறவினர் களுக்கும், கட்சியினருக் கும் கொடுத்துக்கொண் டிருக்கும் நிலையில்தான் அவரிடமிருந்து மா.செ. பதவி பறிக்கப்பட்டி ருக்கிறது.

மா.செ. பதவி பறிப்பு பற்றி ரவிச்சந்திரனுக்கு நெருக்கமான வட்டாரத் தில் விசாரித்தோம்.

""ரெண்டு வருட மாகவே பகவதியம்மன் மீது அளவு கடந்த பக்தி கொண்டுவிட்டார் ரவி. பகவதி கோயில் விஷயத்தில் அறநிலையத் துறைக்கு எதிராக மா.செ. ரவிச் சந்திரன் வழக்குப் போட்டிருப்பதையும் அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் மூலம் ஜெ.யின் கவனத்துக்கு கொண்டுபோய்விட்டார் அறநிலைய ஆணையர் தனபால். விஷயத்தை கேள்விப்பட்ட ஓ.பி.எஸ்.சும் அமைச்சர் வைத்திலிங்கமும் ரவியை தொடர்புகொண்டு திட்டியதோடு, வழக்கை உடனே வாபஸ் வாங்கச் சொன்னார்கள். இடையில் சனி, ஞாயிற்றுக்கிழமைகள் வந்ததால் ரவியால் வழக்கை வாபஸ் பெற முடியலை. அதற்குள் அறநிலைய ஆய்வாளர் தாக்கப்பட்டதாக தகவல் கார்டனுக்குப் போய்விட்டது. மா.செ. பதவியை பறித்துவிட்டார்கள்.

தற்போது கோயில் சாவியை கலெக்டரிடம் ஒப்படைத்துவிட்டு, வழக்கையும் வாபஸ் வாங்கப் போகிறார் ரவி'' என்கிறார்கள் ரவிச்சந்திரன் மீது பற்று கொண்ட ர.ர.க்கள்.



நன்றி:நக்கீரன்

Share

0 comments:

Copyright © 2013 Thiruvalandurai Village / Perambalur District .
.