Monday, May 4, 2015

பத்தாம் வகுப்பு மாணவனின் கையை சிதைத்த பசும்பலூர் சாதி கலவரம்

Unknown  /  at  7:35 PM  /  No comments

பத்தாம் வகுப்பு மாணவனின் கையை சிதைத்த பசும்பலூர் சாதி கலவரம்..
பாதிக்கப்பட்ட பத்தாம் வகுப்பு மாணவன்
பெரம்பலூர் மாவட்டத்தில் பல வருடங்களாக சாதிகலவரங்கள் ஏற்படாத வண்ணம் இருந்தது பெருமையாக இருந்தது. தருமபுரி கலவரம், ராமதாஸ் கைது செய்யப்பட்டபோது பெரம்பலூரில் 100பேர்கூட கைது செய்யப்படவில்லை என்பதில் பெரம்பலூர் எப்படிபட்ட சமூக நல்லிணக்கம் கொண்ட மாவட்டம் என்பது விளங்கும். அப்படிப்பட்ட இப்போது பெரம்பலூர் மாவட்டத்தில் சாதி கலவரத்தீ பற்றி எரிய துவங்கியுள்ளது

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், பசும்பலூர் கிராமத்தில் சுமார் 750 தலித் குடும்பங்களும், 700 வன்னியர் குடும்பங்களும், 300க்கும் மேற்பட்ட உடையார் சமுகத்தினரும் இதர சாதி மக்களும் வசித்து வருகிறார்கள். கடந்த 1917 ஆம் ஆண்டு, ஊரின் மையப்பகுதியில் எல்லா சமூகத்தினருக்கும் பொதுவான இடத்தில் தமிழக அரசு சார்பில் கிராம பஞ்சாயத்து அலுவலகம் (சாவடி) கட்டப்பட்டது.
பிரச்னைக்குறிய இடம்
இந்த இடம் மொத்தம் 6 சென்ட் அளவு கொண்டது. அதில் 2 சென்ட் இடத்தில் கட்டிடம் கட்டியது போக மீதமுள்ள 4 சென்ட் நிலத்தில் கடந்த 1970 ஆம் ஆண்டு நடராஜ் படையாச்சி என்பவருக்கு அன்றைய பெரம்பலூர் ஆர்டிஓ பட்டா வழங்கி விட்டார். இதை அறிந்த தலித் மக்கள், ஊர் பொது இடத்தை தனிநபருக்கு பட்டாவழங்கியது தவறு என அன்றைய நிலசீர்திருத்த ஆணையர் திரு. கார்த்திகேயன் அவர்களிடம் மனு கொடுத்தனர்.
சப் கலெக்டர் விசாரணை
அம்மனுவை விசாரித்த நிலசீர்திருத்த ஆணையர், நடராஜ் படையாச்சிக்கு நிலப்பட்டவை ரத்து செய்து 1972 ஆம் ஆண்டு ஆணை பிறப்பித்தார். இதிலிருந்தே பசும்பலூரில் சாவ


டிக்கான சண்டை சாதிதீயாக உருமாறியது. பட்டா ரத்து செய்யப்பட்டதை பொருத்துக்கொள்ள முடியாத வன்னியர்கள் ஒன்றுசேர்ந்து தலித்களுக்கு ஆதரவாக இருந்த கட்டை ஆறுமுகம்(தலித்) என்பவரை படுகொலை செய்தார்கள். அந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்துகொண்டிருந்தபோது, வழக்கமாக சாதிவெறியர்களை காப்பாற்றுவதில் முதல்பரிசு வெள்ளும் தமிழக காவல் துறை, இந்த வழக்கில் சாட்சியங்களை ஆஜர்படுத்த தவறியதால் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டனர்..
இந்நிலையில் கடந்த வருடம் பசும்பலூர் தலித் மக்கள் மாவட்ட ஆட்சியாளர் அவர்களிடம், ,மீண்டும் முறையிட்டு பிரச்னைக்குறிய சாவடி எல்லா சமூக மக்களுக்கும் பொதுவானதாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை மனு கொடுத்தனர்.

சம்பவத்திற்கு பிறகு குவிக்கப்பட்ட போலீஸ்
இந்தமனுவை பெற்றுக்கொண்ட பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தரேஷ் அகமது அவர்கள் பெரம்பலூர் கோட்டாட்ச்சியர் மசூதன் ரெட்டி அவர்களிடம் அனுப்பி அமைதி பேச்சுவார்த்தைக்கு உத்தரவு விட்டார்.அதன்பிறகு மதுசூதன் ரெட்டி தலைமையில் இரண்டு தரப்பையும் அழைத்து பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டப்படாதநிலையில், மாவட்ட நிர்வாகம் புல எண் 512/1,2,3 ல் இருக்கும் சாவடியை யாரும் பயன்படுத்த கூடாது என்று உத்தரவிட்டார்கள்.
இந்நிலையில் கடந்த 03.05.2015 அன்று தலித்கள் வசிக்கும் தெருவில் உள்ள மக்கள் மாரியம்மன் கோவில் திருவிழாவை விமர்சியாக கொண்டாடினர். இந்த விழாவிற்கு வரும் பக்தர்களை வரவேற்க பேனர்களை அடித்து தலித்கள் சாவடிக்கு அருகே வைத்திருந்தனர்.
இது வன்னியர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது, நமக்கு சொந்தமான சாவடி அருகே தலித்துகள் பேனர் வைப்பதா என கொதித்த 200 வன்னியர்கள் திரண்டு, தலித்துகள் மாரியம்மன் கோவில் திருவிழாவை விமர்சியாக கொண்டாடிக்கொண்டிருக்கும் நேரத்தில் கொடுவ,கத்தி, வெடிகுண்டு, தீப்பந்தம் போன்ற ஆயுதங்களை திரட்டியுள்ளனர். வீட்டுமாடியில் கற்களை சேகரித்து வைத்ததாகவும் சொல்லப்படுகிறது. தாக்குதலுக்கு தயாராக இருந்த வன்னியர்கள் திருவிழா முடித்து வீடு திரும்பிக்கொண்டிருந்த தலித்துகள் மீது கொடுரமான தாக்குதல் நடத்தினர்.
இந்த கலவரத்தில்.....
1. மூன்று(3) குடிசைகள் எரிக்கப்பட்டது,
2. கோவில் திருவிழா விளம்பர பதகைகள் எரித்து நாசம் செய்து விட்டனர்,
3. வன்னியர்கள் வீசிய வெடிகுண்டு 10 ஆம் வகுப்பு தேர்வு எழுதியுள்ள . து. இராஜ்குமார் என்கிற மாணவர் கையை சிதைத்துள்ளது. மிக மோசமான நிலையில் மாணவனின் கைவிரல்கள் திருச்சி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது,
4. காவல்துறை வழக்கம்போல இருதரப்பு மீதும் வழக்கு பதிவு செய்து கைதுசெய்துள்ளது. அதில் பாதிக்கப்பட்ட தலித்கள் 15 பேர் கைது.
5. தலித்துகள் வீடுகள் முற்றிலும் எரிந்த நிலையில் வன்னியர்கள் தங்கள் வீடுகளுக்கு முன் இருந்த கொட்டகைகளை தலித்துகள் எரிக்கப்பட்டதாக சொல்கிறார்கள்.



கலவரத்தின் பின்னணி என்ன....
1. சர்ச்சைக்குறிய சாவடியை கலவரத்திற்கு அடுத்தநாள் 04.05.2015 அன்று மாவட்ட நிர்வாகம் சீல் வைத்துள்ளனர். 4.04.2015 அன்று தடை உத்தரவு போட்ட அன்றே வருவாய்துறை சம்மந்தபட்ட சாவடியை பூட்டி சீல் வைக்கவில்லை.
2. பசும்பலூரில் இவ்வளவு பிரச்சனை இருக்கிறது என்று தெரிந்தும் காவல்துறை ஏன் கூடுதல் பாதுகாப்பு வழங்கவில்லை. உளவுதுறை அதிகாரிகள் பெரம்பலூர் மாவட்டத்தில் என்ன செய்கிறார்கள்.

காடுவெட்டி குரு நடத்திய  கூட்டம்
3. பெரம்பலூர் மாவட்டத்தில் 1996ம் ஆண்டு அனுக்கூர் கலவரம் நடந்தது. வன்னியர்களுக்கும் தலித்துகளுக்குமான பிரச்னையில் 100க்கும் மேற்பட்ட தலித் குடிசைகள் எரிக்கப்பட்டன. அடுத்து கடந்த சிலவருடங்களாக வன்னியர் சங்க தலைவர் ஜெ.குரு. எம்.எல்., பெரம்பலூர் மாவட்டத்திற்குள் வந்துபோனால் பெரம்பலூரில் கலவரத்தீ பிடிப்பது பலருக்கும் தெரியும். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஒகளூர் எனும் ஊரில் கொடியேற்ற வந்தபோது, தலித்துகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன்பிறகு அந்த ஊரில் அடுத்து சில நாட்களுக்கு பிறகு வன்னியர்களே, வன்னிய பெண் ஒருவரை தலித் இளைஞர் காதலிப்பதாக போஸ்டர் ஒட்டினார். இந்த பிரச்னை பூதாகரமானது. பிறகு உண்மை ஒகளூரைச் சேர்ந்த அந்த வன்னியர் தற்கொலை செய்துகொண்டார். இதேபோல் வன்னியர்கள் அதிகம் வசிக்கும் கீழப்பெரம்பலூர் எனும் ஊரில் 4மாதங்களுக்கு முன் தலித் பெண்கள் பெரம்பலூர் கல்லூரிக்கு செல்ல பேருந்தில் ஏற நின்றுகொண்டிருந்தபோது, வன்னிய இளைஞர்கள் வம்பு செய்து கல்வீச்சு வரை போனது. இந்நிலையில்தான் கடந்த 4.4.15 அன்று பசும்பலூர் சாவடியை அரசு சீல் வைத்தது. 18.4.15 அன்று காடுவெட்டி குரு தலைமையில் பசும்பலூருக்கு 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வி.களத்தூர் எனும் ஊரில் உள்ள .டி.எம் திருமண மண்டபத்தில் வன்னியர்கள் கூட்டம் போட்டார்கள். அடுத்து 15நாட்களுக்குள் இந்த பகுதியில் ஒரு கலவரம் வெடித்துள்ளது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு காவல்துறை ஏன் முன்னெச்சரிக்கையாக செயல்படவில்லை.
அம்பலமானதும்
4. 6. இந்த கலவரத்தில் வழக்கம் போல போலீஸ்காரர்கள் காயமடைந்ததாக சொல்லப்பட்டுகிறது. இதில் வி.களத்தூர் எஸ். விவேக் உள்ளிட்ட போலீஸார் கடுமையாக காயம் என பொய் சொல்கிறார்கள். தலித் சிறுவன் கை மணிக்கட்டுகள் துண்டிக்கும் சம்பத்தை மறைக்க மாவட்ட நிர்வாகம் நாடகமாடுகிறது. மேல் சிகிச்சைக்காக சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். வன்னியர்கள் எத்தனைபேர் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் ?
5. இப்போது ஊர் முழுக்க போடப்பட்டிருந்த காவல்துறையில் கால்பங்காவது கலவரத்திற்கு முதல்நாள் போடப்பட்டிருந்தால் குடிசைகளில் குடியிருந்த தலித்துகளின் வீடுகளாவது காப்பாற்றப்பட்டிருக்கும்..
அப்பாவி தலித்துகள் மீது வழக்கு போட்டு பிரச்னைக்கு கட்டபஞ்சாயத்து செய்யும் இந்த பிரச்னையில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம்,மனித உரிமை அமைப்புகள் போன்றவைகள் உடனடியாக தலையிட வேண்டும்
ஊடகங்கள், பத்திரிகை நண்பர்கள், சமூக ஆர்வலர்கள் உண்மையை உலகத்திற்கு துணை நில்லுங்கள்.. முடிந்தால் இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்..

பசும்பலூர் மட்டுமல்ல பெரம்பலூர் மாவட்டம் அமைதி பூங்காவாக விளங்கட்டும்.


Share
Posted in: , , , Posted on: Monday, May 4, 2015

0 comments:

Copyright © 2013 Thiruvalandurai Village / Perambalur District .
.