Friday, May 22, 2015

நாளை காலை ஜெயலலிதா பதவி ஏற்பு - புதிய அமைச்சர்கள் பட்டியல் இதோ

Unknown  /  at  2:51 AM  /  No comments


தமிழக ஆளுநரை சந்தித்தார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தமிழக ஆளுநர் ரோசைய்யாவை சந்தித்தார் அதிமுக பொதுச் செயலாளர் செல்வி.ஜெயலலிதா. இன்று மதியம் தன்னுடைய போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து காரில் புறப்பட்ட ஜெயலலிதாவுக்கு,அதிமுக தொண்டர்கள் ஆராவரத்துடன் மிகப்பெரிய வரவேற்பை வழங்கியிருந்தனர்.

 தாரை தப்பட்டைகள் முழங்க,ஜெயலலிதாவை வாழ்த்தும் கோசங்கள் அவர் போகும் வழியெங்கும் கேட்க கூடியதாக இருந்தது. கோட்டூர்புரத்தில் உள்ள விநாயகர் கோயிலில் சாமி தரிசனம் செய்த பின்னர்,கிண்டி ஆளுநர் மாளிகை சென்றடைந்தார் ஜெயலலிதா. ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ரோசைய்யாவை சந்தித்த ஜெயலலிதா,நாளை பதவி ஏற்கவுள்ள புதிய அமைச்சர்களுக்கான பட்டியலை அவரிடம் வழங்கினார். 

29 புதிய தமிழக அமைச்சர் மற்றும் துறை

பன்னீர் செல்வம் - நிதி அமைச்சர் அமைச்சர்

நத்தம் விஸ்வநாதன் - மின்சாரத்துறை அமைச்சர் 

வைத்திலிங்கம் - வீட்டு வசதித்துறை அமைச்சர் 

எடப்பாடி பழனிச்சாமி - நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறுத்துறைமுகம் மற்றும் வனத்துறை அமைச்சர் 

மோகன் - ஊரகத் தொழில்த்துறை அமைச்சர் 

வளர்மதி - சமூக நலத்துறை அமைச்சர்

பழனியப்பன் - உயர்கல்வித்துறை அமைச்சர்

செல்லூர் ராஜூ - கூட்டுறவுத்துறை அமைச்சர்

காமராஜ் - உணவு மற்றும் இந்து
 அரநிலைத்துறை அமைச்சர் 

தங்கமணி - தொழில்த்துறை அமைச்சர் 

செந்தில் பாலாஜி - போக்குவரத்து த்துறை அமைச்சர்

எம்.சி.சம்பத் - வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்

வேலுமணி - நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் சட்டம் அமைச்சர்

சின்னையா - கால்நடை பராமறிப்பு அமைச்சர்

கோகுல இந்திரா - கைத்தறி மற்றும் ஜவுளித்துறை அமைச்சர்

சுந்தர் ராஜ் - விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அமைச்சர்

சண்முகநாதன் - சுற்றுலாத்துறை அமைச்சர்

சுப்பிரமணியன் - ஆதி திராவிட மற்றும் பழங்குடி அமைச்சர்

ஜெயபாலு - மீன்வளத்துறை அமைச்சர்

என். சுப்பிரமணியன் - தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர்

உதயகுமார் - வருவாய்த்துறை அமைச்சர்

டி.கே.ராஜேந்திர பாலாஜி - தகவல் மற்றும் சிறப்பு திட்ட அமலாகப்பிரிவுத்துறை அமைச்சர்

பி.வி.ரமணா - பால் வளத்துறை அமைச்சர்

கே.சி.வீரமணி - பள்ளி கல்வித்துரை அமைச்சர்

என்.டி. வெங்கடாசலம் - சுற்றுசூழல்த்துறை அமைச்சர்

டி.பி.பூனாச்சி - காதி மற்றும் ஊரகத் தொழில்த்துறை அமைச்சர்

அப்துல் ரஹிம் - பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மைத்துறை அமைச்சர்

சி.விஜய் பாஸ்கர் - சுகாதாரத்துறை அமைச்சர்.


இந்த அமைச்சர்கள் பட்டியலில் இதற்குமுன் அமைச்சராக இருந்த செந்தூர் பாண்டியன் உடல்நல குறைவாலும்,எம்.எஸ் ஆனந்தன் சில அரசியல் காரணங்களாலும் தற்போதைய பட்டியலில் இடம்பெறவில்லை என்பதும். ஜெயலலிதா பதவியேற்பு நிகழ்ச்சியில் பிஜேபி சார்பில் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி கலந்து கொள்வார் என சொல்லப்படுகிறது.

ஜெவின் பதவியேற்பு பல அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share
Posted in: , Posted on: Friday, May 22, 2015

0 comments:

Copyright © 2013 Thiruvalandurai Village / Perambalur District .
.